ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் உள்ள மகிந்த ராஜபக்ஸ மாநாட்டு மண்டபத்தில் இந் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. “உறுதியான நோக்கம் – தொழில் செய்யும் நாடு” என்ற தொனிப்பொருளில் இந்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.
பல தொழில் வல்லுனர்கள் மற்றும் சமூக குழுக்களின் ஆலோசனைகளை பெற்று இந்த தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் முதலில் சர்வமத தலைவர்களிடம் கோத்தாபய ராஜபக்ஸவினால் கையளிக்கப்பட்டது. பின்னர் எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸவிடமும் கையளிக்கப்பட்டது.