ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல்-பாக்தாதி, சிரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள இட்லிப் மாகாணத்தில் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க படையினரால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
நேற்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது அவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை உறுதிசெய்துகொள்வதற்காக மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவல் உறுதியானதா என கேள்வி எழுந்துள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் இதை சூசகமாக குறிப்பிட்டுள்ளார். அதில் சற்று நேரத்துக்கு முன்னர் மிகப்பெரிய காரியம் ஒன்று நடந்துள்ளது என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் டிரம்ப், முழுமையான தகவல் கிடைத்தவுடன் அபுபக்கர் அல்-பக்தாதி கொல்லப்பட்ட விபரத்தை அதிகாரப்பூர்வமாக தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. #ஐ.எஸ். #தலைவர் #உயிரிழப்பு #அமெரிக்கா #அபூபக்கர்அல்பாக்தாதி #சிரியா