Home இலங்கைஜனாதிபதித் தேர்தல் குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பு அதற்கான கருமங்கள் தொடர்கின்றன…

ஜனாதிபதித் தேர்தல் குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பு அதற்கான கருமங்கள் தொடர்கின்றன…

by admin

எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் சிந்தித்து வாக்களிப்பதற்கான கால அவகாசத்தினை வழங்கும் வகையில் தமது முடிவினை உரிய நேரத்தில் அறிவிக்க உள்ளதாக  என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்  தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையிலும் அதற்கான தபால் மூலமான வாக்களிப்பு 31ஆம் மற்றும் முதலாம் திகதிகளில் இடம்பெறவுள்ள நிலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தலில் எத்தகைய முடிவினை அறிவிக்கவுள்ளது என்பது தொடர்பில் எழுந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது  சம்பந்தன் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் கூட்டமைப்பானது சரியான முடிவினை நிச்சயமாக அறிவிக்கும். அதற்கான கருமங்கள் நடைபெற்றவண்ணமுள்ள நிலையில் இந்த விடயத்தில்  நிதானமாக செயற்படுவதற்கு தாம்  தலைப்பட்டுள்ளதாக குறிப்பி்டுள்ளார்.

பிரதானமாக உள்ள மூன்று கட்சிகளில் இரண்டு வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தினை வெளியிட்டுள்ளார்கள். ஏனைய தரப்பினரும் அடுத்துவரும் நாட்களில் விஞ்ஞாபனத்தினை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை ஆழமாக கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அதனையடுத்தே  தீர்க்கமான அறிவிப்பு வெளியிடப்படும். தமிழ் மக்களின் எதிர்காலத்தினையும், பாதுகாப்பினையும் கருத்திற்கொண்டதாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை என வலியுறுத்தி உள்ளார்.

இதேவேளை  ஐந்து கட்சிகள் கூட்டாக இணைந்து தமிழ் மக்கள் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்கள். அதுதொடர்பாக அடுத்த கட்டமாக எவ்வாறான கருமங்களை முன்னெடுப்பது என்பது தொடர்ந்து அந்தக்கட்சிகள் யாழ்ப்பாணத்தில் 30ஆம் திகதி கூடி ஆராய்ந்து தீர்மானிக்கவுள்ளன. அந்த விடயங்கள் தொடர்பிலும் கூட்டமைப்பு அவதானத்துடன் இருப்பதாகவும்  இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More