உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் கே.சி.மிட்டல், இது தொடர்பான மனுவை தேர்தல் ஆணையத்திடம் கையளித்துள்ளார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி 5 மாநில முதலமைச்சர்களின் விளம்பர பதாதைகள் உடனடியாக அகற்றப்பட்ட போதும் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் அடங்கிய விளம்பர பதாதைகள் வானக எரிப்பொருள் நிரப்பு நிலையங்கள் உட்பட பல்வேறு இடங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது எனவும் மத்திய அரசு விளம்பரங்களிலும் மோடி படத்துடன் கூடிய விளம்பர பதாதைகள் பொது இடங்களில் வைக்கப்பட்டு இருக்கின்றன எனவும் எனவே தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் மோடியின் விளம்பர பதாதைகளை உடனடியாக அகற்ற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.