Home இலங்கைபாதுகாப்பு பிரிவினருக்கு பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை…

பாதுகாப்பு பிரிவினருக்கு பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை…

by admin

பாதுகாப்பு பிரிவுகளில் கடைமையாற்றும் எந்தவொரு படைவீரரும் காவற்துறை  உத்தியோகத்தர்களும், தேர்தலில் வாக்களிப்பதை தவிர வேறு எந்த அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு உரிமையில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு இன்று (29.10.19) வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போது சேவையில் ஈடுபட்டுள்ள மற்றும் ஓய்வுப்பெற்றுள்ள பாதுகாப்பு படையினர் மற்றும் காவற்துறை  உத்தியோகத்தர்கள் தமது சீருடையில் இருக்கும் புகைப்படங்களை பிரசுரித்து அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதை முழுமையாக தவிர்த்துக்கொள்ளுமாறும் அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தமது புகைப்படங்களை பயன்படுத்த இடமளிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் அதில் அமைச்சு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு இராணுவத்தினர் கடற்படையினர் விமானப்படையினர் மற்றும் காவற்துறையினர் பக்கச்சார்ப்பின்றி நடந்துகொள்ள வேண்டும் என்றும் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More