பெங்களூவில் உள்ள தேசிய கிரிக்கெட் அக்கமியின் தலைவராக இந்திய அணியின் முன்னாள் தலைவர் ராகுல் டிராவிட் அண்மையில் நியமிக்கப்பட்டிந்தார்.
ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகிக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் டிராவிட் துணை தலைவர் பதவியில் இருந்து வருகிறார். எனவே அவரை தேசிய கிரிக்கெட் அக்கமி தலைவராக நியமித்தது இரட்டை ஆதாய பதவி வகிக்கும் பிரச்சினையாகும் என மத்திய பிரதேச கிரிக்கெட் சங்க ஆயுட்கால உறுப்பினர் சஞ்சீவ் குப்தா முறைப்பாடு செய்திருந்தார்.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நன்னடத்தை அதிகாரி டிராவிட்டிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியிருந்த கடிதத்திற்கு பதிலளித்திருந்த டிராவிட் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து தான் நீண்ட விடுப்பில் இருக்கிறேன் எனவும் தனக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நன்னடத்தை அதிகாரி மீண்டும் டிராவிட்டுக்கு எதிர்வரும் 12ம் திகதி டெல்லியில் நேரில் முன்னிலையாகி மேலும் விளக்கம் அளிக்க வேண்டும் என அழைப்பாணை அனுப்பியுள்ளார்