Home இலங்கைசிவாஜிலிங்கம் பதவி விலகல்

சிவாஜிலிங்கம் பதவி விலகல்

by admin

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில் (ரெலோ) இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் எம்.கே.சிவாஜிலிங்கம். இன்று காலை பதவிவிலகல் கடிதத்தை கட்சியின் செயலாளரிடம் நேரடியாக வழங்கினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ அமைப்பின் தவிசாளராக இதுவரை சிவாஜிலிங்கம் பதவி வகித்து வந்திருந்தார்.

இந் நிலையில் ஐனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக கட்சிக்கு தெரியாமல் அறிவித்தல் விடுத்திருந்தார். இதனால்  அதிருப்தியடைந்த ரெலோ, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனையடுத்து தானாகவே கட்சியில் இருந்து விலகுவதாக சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார்.

இதற்கமைய கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தான் விலகுவதாக கட்சியின் செயலாளர் நாயகமான சட்டத்தரணி என்.சிறிகாந்தாவுடம் கடிதமொன்றையும் இன்று காலை நேரடியாக கையளித்துள்ளார். #சிவாஜிலிங்கம்  #பதவிவிலகல் #சிறிகாந்தா  #ரெலோ

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More