பிரான்சில் நடைபெற்ற பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் நேற்றையதினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச் டெனிஸ் ஷபோவலோவை வென்று 5-வது முறையாக சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளார்.
முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் கனடாவின் டெனிஸ் ஷபோவலோவை வென்று 5-வது முறையாக இங்கு சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளார்.
ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் இத்தகைய ஏ.டி.பி. மாஸ்டர்ஸ் தொடரை ஜோகோவிச் வெல்வது இது 34-வது முறையாகும். இந்த வகையில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 35 பட்டங்கள் பெற்று முன்னணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது #பாரீஸ்மாஸ்டர்ஸ்டென்னிஸ் #ஜோகோவிச்