தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவின் தலைமைக் குழு கூட்டத்தில் எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலின் நிலைப்பாடு தொடர்பில் சுமார் 6 மணித்தியாலங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டு இன்று புதன்கிழமை இரவு இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இவ்விடையம் தொடர்பில் தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ விடுத்துள்ள ஊடக அறிக்கையில், எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்குவது என தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ தீர்மானித்துள்ளது.
இவ்அறிவித்தலை தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ கட்சியின் தலைவர் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் வெளியிட்டுள்ளார்.
எதிர் வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் டெலோ இயக்கம் தொடர்ந்தும் பல்வேறு மட்டங்களில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வந்தது.
இந்த நிலையில் தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவின் தலைமை குழுவில் இன்று புதன்கிழமை மாலை சுமார் 6 மணி நேரம் விரிவாக விவாதிக்கப்பட்ட நிலையில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச விற்கு ஆதரவு வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.
இந்த விடயத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என சில உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டு பெரும்பான்மை ஆதரவு அடிப்படையில் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
கூட்டத்திற்கு கட்சியின் உப தலைவர் பிரசன்னா இந்திரகுமார் தலைமை தாங்கினார் .
கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் , செயலாளர் நாயகம் சட்டத்தரணி சிறிகாந்தா உட்பட 15 தலைமைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.