குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் சீனா விளக்கம் கோரியுள்ளது. என்ன காரணத்திற்காக சீன துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எதற்காக எதிர்ப்பு வெளியிடுகின்றார் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இலங்கைக்கான சீனத் தூதுவர் யீ ஸியான்லீயாங், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை இன்றைய தினம் சந்தித்துள்ளார். மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
இதேவேளை வெளிநாடு ஒன்றுக்கு 15000 ஏக்கர் காணி வழங்கப்படுவதனையே எதிர்ப்பதாக சீனத் தூதுவருக்கு தெளிவுபடுத்தியதாக மஹிந்தவின் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.