தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் வறட்சி பாதித்த பகுதிகள் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் பயிர்கள் கருகியமையால் தற்கொலை செய்து கொண்ட 17 விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபா நிதி உதவி வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளதால் இதுவரையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ள நிலையில் இது தொடர்பாக பல பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கை இன்று முதலமைச்சரிடம் வழங்கியதன் அடிப்படையில் தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக முதலமைச்சர் அறிவித்துள்ளர்h.
மேலும் விவசாயம் பொய்த்த அதிர்ச்சியால் உயிரிழந்தோர் விவரங்கள் மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்கப்பட்டுள்ளதுடன் விவசாயிகளின் நிலவரி தள்ளுபடி செய்யப்படுவதாகவும் கிராமப்புற ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் 100 நாட்களிலிருந்து 150 நாட்களாக உயர்த்தப்படும் எனவும் கால்நடை தீவனப் பற்ற்றாக்குறையை போக்க 78 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும் தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.