Home உலகம்அவுஸ்­ரே­லி­யாவில் வேக­மாக பரவும் காட்டுத் தீக்கு  மூவர் பலி

அவுஸ்­ரே­லி­யாவில் வேக­மாக பரவும் காட்டுத் தீக்கு  மூவர் பலி

by admin


அவுஸ்­ரே­லி­யாவின் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயீன்ஸ்­லாந்து பிராந்­தி­யங்­களில் வேக­மாக பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி குறைந்­தது 3 பேர் பலி­யா­ன­துடன் பல்­லா­யி­ரக்­க­ணக்­கா­னோர் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர்.

மேற்­படி பிராந்­தி­யங்­களில் 100 க்கு மேற்­பட்ட காட்டுத் தீ சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்ள நிலையில் அங்கு நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை மூன்­றா­வது நாளாக அவ­ச­ர­கால நிலைமை பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

அந்­நாட்டு பிர­தமர் ஸ்கொட் மொரிஸன் இரு மாநி­லங்­க­ளி­லும் ­இந்தத் தீயை அணைக்க போரா­டி­வரும் சுமார் 1,300 தீய­ணைப்புப் படை­வீ­ரர்­க­ளுக்கு உதவ இராணுவத்தினரின் உதவியை நாடியுள்ளார். அவர் இந்தக் காட்டுத் தீ அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் மேற்படி தீயணைப்பு செயற்கிரமத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்களும் தொண்டு அடிப்படையில் தாமாக முன்வந்து பங் கேற்றள்ளனர். இந்தக் காட்டுத் தீயில் சிக்கி நியூ சவுத் வேல்ஸில் மட் டும் 150 க்கு மேற்பட்ட வீடுகள் அழிவடைந்துள்ளன. கடுமையான வறட்சியான காலநிலை நிலவுவதால் காட்டுத் தீ மேலும் வேகமாக பரவும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More