இந்த நாட்டில் பெரும்பான்மை, பௌத்த மக்களின் வாக்குகளால் மாத்திரம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யமுடியும் என, தான் ஆரம்பித்திலிருந்து கருதினாலும், இலங்கையின் தமிழ், முஸ்லிம் மக்களிடம் தமது வெற்றியில் பங்கேற்குமாறு கோரிக்கை விடுத்ததாகவும், ஆனால் எதிர்பார்த்தளவு பலன்கள் தமக்கு கிடைக்கவில்லை எனவும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். என்றாலும் பரவாயில்லை. இனிவரும் காலங்களில் உண்மையான இலங்கையர்களாக தம்முடன் இணைந்து பயணிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய புதிய ஜனாதிபதியாக, கோத்தாபய ராஜபக்ஸ சபதவிப் பிரமாணம் செய்துக்கொண்டு, ஆற்றிய விசேட உரையின் போதே இதனைத் தெரிவித்தார்.
3 comments
சிறுபான்மையினரான
நாம், உண்மையான இலங்கையர்கள்தான்
என்பதை ஏற்று, மதித்து, எம்மையும் அரவணைத்துப்
பயணிப்பீர்களென உறுதி வழங்கினால், நாம்
இணைந்து பயணிக்கத் தயாராகவே இருகின்றோம்.
இலங்கையில் இன- மதவாதமற்ற ஒரு ஆட்சி
ஏற்படுத்தப்படுமானால், குறுகிய கால, அபார
வளர்ச்சியைத் தரும் பங்காளர்களில்
முதன்மையானவர்களாகச் சிறுபான்மையினர்
இருப்பார்கள், என்பதைச் சொல்லவும் வேண்டுமா?
உண்மையான இலங்கையர்களாக இருக்கவேண்டும் என்பனால்தான் சமஸ்டி மற்றும் சுயநிர்ணய உரிமை குறித்து இவளவு தமிழின அழிப்பின் பின்னரும் தமிழர்களால் பேசப்படுகிறது. இந்த யதார்த்தை முதலில் சிங்கள ஆட்சியாளர் முதல் கடும்போக்காளர்வரை உணர்வதோடு, இலங்கையின் பூர்வீகக்குடிகள் கேட்கும் சமபங்காளர் என்ற உரிமையையும் ஏற்பதனூடாக மட்டுமே இலங்கையர் என்றஉணர்வைப் பெற வைக்கமுடியும். தவிர ஆட்சி அதிகாரக் கைப்பற்றலுக்காகவும், சிங்கள பௌத்தமயமாக்கலுக்காவும், சிங்களப் பெருன்மையைக் காட்டித் தமிழரை அச்சுறுத்தவும் ‘உண்மையான இலங்கையர்’ என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படுமாயின் அது இலங்கைக்குத் தோல்வியையே பரிசளிக்கும். யுத்தவெற்றியின்போதும், இதே சொல்லாடலூகத் தமிழினத்தை ஒடுக்கியதை மீண்டும் புதிய அரசுத்தலைமை முன்வைப்பதானது ஒருவகை அச்சுறுத்தலேயன்றி வேறில்லை. எனவே முதலில் தமிழர்கள் இலங்கையராக வேண்டின் சிங்கள அரசு திறந்த மனதோடு செயற்படுவதும், தமிழரைச் சமதரப்பாக ஏற்பதும் நிகழ வேண்டும். அப்போதுதான் ‘உண்மையான இலங்கையர்’ என்பது பயன்படும்.