முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தேசிய ஒருமைப்பாட்டிற்கும், நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தவிசாளர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
நாட்டில் இனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில் 2015 ஆம் ஆண்டில் ஆட்சிபீடமேறிய மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தேசிய அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட தேசிய ஒருமைப்பாட்டிற்கும், நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தவிசாளராக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நியமிக்கப்பட்டிருந்தார்.
சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமைத்துவம் மற்றும் தூரநோக்கு சிந்தனையின் ஊடாக கடந்த நான்கு வருடகாலத்தில் தேசிய ஒருமைப்பாட்டிற்கும், நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தினால் ஓரளவு முன்னேற்றத்தை அடைந்துகொள்ள முடிந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இதேவேளை கடின உழைப்பு, விடாமுயற்சி போன்ற சிறிய விடயங்களிலேயே வெற்றியின் இரகசியம் மறைந்திருக்கிறது என்பதை தமக்கு உணர்த்திய தலைமைத்துவத்திற்கு கனத்த மனதோடு விடைக்கொடுக்கின்றோம் என தேசிய ஒருமைப்பாட்டிற்கும், நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #சந்திரிகா #தவிசாளர் #இனங்களுக்கிடையிலான