Home இலங்கைநேபாளத்தில் நில அதிர்வில் சேதமடைந்த பௌத்த விஹாரைகளை புனரமைக்க இலங்கை உதவி

நேபாளத்தில் நில அதிர்வில் சேதமடைந்த பௌத்த விஹாரைகளை புனரமைக்க இலங்கை உதவி

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நேபாளத்தில் நில அதிர்வில் சேதமடைந்த பௌத்த விஹாரைகளை புனரமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் உதவிகளை வழங்க உள்ளது. நேபாளத்திற்கான இலங்கைத் தூதுவர் டபிள்யூ.எஸ் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

ராடோ மாசிந்திரனாத் விஹாரை மற்றும் ஆனந்த குடி விஹாரை ஆகியனவற்றை புனரமைப்பதற்கு உதவிகளை வழங்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற பாரிய நில அதிர்வில் இந்த இரண்டு விஹாரைகளும் தேசமடைந்திருந்தன.

நேபாளத்திற்கான இலங்கத் தூதுவர் பெரேரா, அந்நாட்டு பிரதிப் பிரதமர் Bimalendra Nidhi  ஐ சந்தித்த போது உதவி வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவில் நேபாளத்திற்கு விஜயம் செய்வார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More