Home இலங்கையாழில் ஆயிரம் கிலோ கிராம் கேரளக் கஞ்சா எரிக்கப்பட்டது….

யாழில் ஆயிரம் கிலோ கிராம் கேரளக் கஞ்சா எரிக்கப்பட்டது….

by admin

சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான ஆயிரம் கிலோ கிராம் கேரளக் கஞ்சா போதைப்பொருள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் எரித்து அழிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கரின் உத்தரவில் அவரது முன்னிலையில் இந்த சான்றுப்பொருள்கள் எரித்து அழிக்கப்பட்டன.

யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்துக்கு அண்மையாகவுள்ள வெற்றுக் காணியில் இந்த சான்றுப்பொரு எரித்து அழிக்கும் பணி இன்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற்றது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் கடந்த ஒரு வருடத்துக்குள் இடம்பெற்று முடிந்த கஞ்சா போதைப்பொருள் குற்றத்துகான 20 வழக்குகளின் சான்றுப்பொருள்களை எரித்து அழிக்குமாறு மன்று உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் அவற்றை எரித்து அழிப்பதற்கான நடவடிக்கைகளை மேல் நீதிமன்ற பதிவாளர் மீரா வடிவேற்கரசன் முன்னெடுத்தார்.

யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்துக்கு அண்மையில் உள்ள வெற்றுக் காணியில் சுமார் ஆயிரம் கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் பொதிகளும் உடைத்து குவிக்கப்பட்டன. மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் அவை தீயிட்டு அழிக்கப்பபட்டது.

இதேவேளை, கடந்த மூன்று வருடங்களில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் 2 ஆயிரத்து 500 கிலோக் கிராமுக்கு அதிகமான கஞ்சா போதைப்பொருள் எரித்து அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More