குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஏமனில் பாலர் பாடசாலை மீது சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படையினர் வான் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். வடக்கு ஏமனில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் இரண்டு சிறுவர்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
அரசாங்கத் தரப்பினர் உயிரிழந்தோர் எண்ணிக்கையை ஐந்தாக குறிப்பிட்டுள்ள போதிலும் கிளர்ச்சியாளர் தரப்பினர் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படவில்லை என கூட்டுப்படையினர் தெரிவித்துள்ளனர்.