கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமது அமைச்சுக் கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். கொழும்பு மாலிகாவத்தையில் அமைந்துள்ள தமது அமைச்சின் அலுவலகத்தில் நேற்றையதினம் (22) அமைச்சின் கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.
கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் நேற்று முற்பகல் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். அதன் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய அமைச்சரவை ஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நீதிமன்றம் மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நேற்று (22.11.19) பிற்பகல் தனது கடமைகளை ஆரம்பித்தார். அமைச்சின் செயலாளர் ஜயந்தி விஜயதுங்க உட்பட அமைச்சின் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.