Home இலங்கைகட்சித் தலைவர் பதவியில் இருந்து ரணில் விலகவுள்ளார்?

கட்சித் தலைவர் பதவியில் இருந்து ரணில் விலகவுள்ளார்?

by admin

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மிக விரைவில் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக  அவருக்கு நெருங்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, கட்சியின் தலைமைப்பதவியை பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகின்றது.

கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களில் கருத்துக்களுக்கு எப்போதும் செவிகொடுக்கும் தலைவர் என்ற ரீதியில் கட்சியின் தலைமை பதவியை கைவிடுவதற்கு தான் தயாராக உள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார்.

2010 மற்றும் 2015 ஆம் வருடங்களில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி பெரும்பான்மையானவர்களின் கோரிக்கைக்கு அமையவே வேட்பாளராக நிறுத்தியதாகவும், இம்முறை பெரும்பான்மையினரின் கோரிக்கைக்கு அமையவே முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு வாய்ப்பு வழங்கியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More