மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் வென்றெடுப்பதற்குமாக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த விடுதலை வீரர்களை நினனவு கூர்ந்து நினைவு நாள் அனுஷ்டிப்பது வரலாற்றுகாலம் தொட்டு உலகம் பூராகவும் மனிதநாகரிகத்தின் முக்கிய பண்பாக காணப்படுகின்றது.
விடுதலைவீரர்களை நினைவு கூர்ந்து அவர்கள் சார்ந்த ஒரு ஒட்டு மொத்தமக்கள் கூட்டமும் வருடாவருடம் நினைவுநாளை அனுஷ்டிப்பது அந்த விடுதலைவீரர்களின் தியாகத்தை நன்றியுடன் நினைவு கூருவதற்கு மட்டுமன்றிஅவர்களின் உறவினர்களின் உள்ளக் குமுறல்கள் மற்றும் வேதனைகளுக்கான ஒரு ஆறுதலை அளிப்பதற்கும் வழிவகுக்கிறது.
ஆனால்,யுத்தம் நடைபெற்றபோது தமது உயிர்களை நீர்த்த விடுதலை வீரர்களை கார்த்திகை மாதத்தில் நினைவு கூருவதற்கு கடந்தகாலங்களில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு பல்வேறு தடைகளும் இடைஞ்சல்களும் நாகரிகமற்றமுறையில் ஏற்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. இருந்தபோதிலும்,சட்டம் ஒழுங்குமற்றும் அமைதி ஆகியவற்றுக்கு பாதிப்புஏற்படாத முறையில் மிகவும் அமைதியானமுறையில் உணர்வுபூர்வமாக கார்த்திகைமாத நினைவுகூரலை எமதுமக்கள் செய்துவருகிறார்கள்.
நாளை 27 ஆம் திகதி வடக்குகிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் நினைவுநாள் நிகழ்வுகள் அமைதியானமுறையில் செய்யப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அறிகின்றேன். அமைதியானவழியில் உரிய சட்டவழிமுறைகளை பின்பற்றி எமதுமக்கள் இந்தநினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்து கொள்ளவேண்டும் என்று வேண்டிக்கொள்கின்றேன். நாட்டில் நிலையான சமாதானத்தையும், இனங்களுக்கு இடையேநல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு பாடுபடப்போவதாக கூறியிருக்கும் புதிய அரசாங்கம் இந்தநினைவேந்தல் நிகழ்வுகள் எந்த இடையூறுகளும் இன்றிநடை பெறுவதற்கு ஆவன செய்யும் என்றுஎதிர்பார்க்கிறேன்.
எமதுமக்கள் சுதந்திரமாகவும் சகல உரிமைகளுடனும் வாழவேண்டும் என்ற உயரிய சிந்தனையுடன் தமது இன்னுயிர்களைஈகம் செய்தஎமதுவிடுதலைவீரர்கள் எமதுமக்களின் மனங்களில் எப்பொழுதுமே வாழ்ந்து கொண்டிருப்பர்.
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முன்னாள் முதலமைச்சர்
வடமாகாணம்
செயலாளர் நாயகம்
தமிழ் மக்கள் கூட்டணி
26.11.2019