Home இலங்கைவிமல் கைது பற்றி முன்கூட்டியே தகவல் வெளியிடப்பட்டமை விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்:-

விமல் கைது பற்றி முன்கூட்டியே தகவல் வெளியிடப்பட்டமை விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்:-

by admin

ஜே.என்.பி யின் தலைவர் விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டமை பற்றி முன்கூட்டியே தகவல் வெளியிடப்பட்டமை விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிவசம் தெரிவித்துள்ளார்.

விமல் வீரவன்ச கைது செய்யப்பட உள்ளதாக ஊடகங்களில் முன்கூட்டியே செய்திகள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்கத்கது.

இவ்வாறு முன்கூட்டியே செய்தி வெளியிடப்பட்டமை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரியுள்ள அவர் குறிப்பாக சமூக ஊடகங்களில் விமல் கைது செய்யப்படுவார் என ஊகம் வெளியிட்டு செய்தி வெளியிடப்பட்டிருந்ததாகவும் அரச நிறுவனங்களின் உள்ளக விடயங்கள் பற்றிய ரகசியத்தன்மை சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காலியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More