ஈராக்கில் நடைபெற்று வரும் போராட்டங்களின் எதிரொலியாக, அந்நாட்டு பிரதமர் அதெல் அப்துல் மஹதி, தனது பதவி விலகியுள்ளார். தொடர் போர்களால் ஈராக்கின் பொருளாதாரம் சீர் குலைந்துள்ளதுடன் வேலையில்லா பிரச்சினையும் அதிகரித்துள்ளது. அத்துடன் ஊழல்களும் இடம்பெறுவதனால் இது மக்கள் மத்தியில் அரசின்மீது பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது
இதன் காரணமாக பிரதமர் அதெல் அப்துல் மஹதிக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களின் போது போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களினால இதுவரை அங்கு 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
இந்தநிலையில் அண்மையில் தொலைக்காட்சியில்; நாட்டு மக்களிடம் உரையாற்றிய அந்நாட்டு ஜனாதிபதி பர்ஹாம் சாலி, அதெல் அப்துல் மஹதி பிரதமர் பதவியிலிருந்து விலகுவதற்கும், பதவிவிலகல் கடிதத்தினை வழங்குவதற்கும் தயாராக உள்ளார் என குறிப்பிட்டார். இந்நிலையில், பிரதமர் அதெல் அப்துல் மஹதி, பதவி விலகியுள்ளார்
தனது பதவிவிலகல் கடிதத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து விட்டதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #போராட்டத்தின் #ஈராக் #பிரதமர் #அதெல்அப்துல்மஹதி