Home இலங்கைசுவிட்சர்லாந்து தூதரக உத்தியோகத்தர் கடத்தப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்…

சுவிட்சர்லாந்து தூதரக உத்தியோகத்தர் கடத்தப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்…

by admin


அண்மையில் இலங்கைக்கான சுவிட்சர்லாநது தூதரகத்தின் பெண் உத்தியோகத்தர் ஒருவர் கடத்தப்பட்டதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குற்றபுலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவற்துறைத்  தலைமையகம் இதனை தெரிவித்துள்ளது.

இந்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்புகளை வழங்குவதற்காக சி.சி.டி.வி கெமராக்களை சோதனை செய்யும் அதிகாரிகள் குழுவும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவத்தை குறிப்பிட்டு குற்றப்புலனாய்வு திணைக்கத்தின் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதன் மூலம் குற்றப்புலனாய்வு அதிகாரிகளை தவறாக வழிநடத்த சந்தேக நபர்கள் எண்ணியுள்ளதாகவும் காவற்துறைத்  தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More