Home இலங்கைமன்னாரில் டெங்குக் காய்ச்சலினால் சிறுமி மரணம் 

மன்னாரில் டெங்குக் காய்ச்சலினால் சிறுமி மரணம் 

by admin

 
மன்னாரில் டெங்கு காய்ச்சலினால் பாதீக்கப்பட்ட சிறுமி ஒருவர் மன்னார்  பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று வியாழக்கிழமை(5) அதிகாலை உயிரிழந்தார்.
மன்னார் நகர பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குற்பட்ட மன்னார்  சின்னக்கடையில் வசிக்கும் மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் 3ஆம் ஆண்டு கல்வி கற்ற மாணவியான மரியதாசன் டிவினியா (வயது 9) என்பவரே டெங்கு காய்ச்சலிற்கு  உள்ளாகி உயிரிழந்துள்ளார்.
முசலி மரண விசாரனை அதிகாரி ஏ.ஆர்.நசீர் மேற்கொண்ட மரண விசாரணையில் இறந்த சிறுமிக்கு கடந்த 30 ஆம் திகதி காய்ச்சல் வந்ததாகவும் பின் முதலாம் திகதி மன்னார் பொது வைத்தியசாலையில் மருந்து எடுக்கப்பட்டு வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகவும் ஆனால் காய்ச்சல் விடாமையால் மீண்டும் 3 ஆம்; திகதி செவ்வாய்கிழமை  மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை வழங்கப்பட்டது.
எனினும்    சிகிச்சை பலனளிக்காமையால் குறித்த சிறுமி இன்று (05) வியாழன் அதிகாலை உயிரிழந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.    #மன்னார்  #டெங்கு #சிறுமி #மரணம் 
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More