அவுஸ்திரேலியாவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதனையடுத்து அங்கு தண்ணீரைப் பயன்படுத்த அந்நாட’;டு அரசாங்கம் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது . கிரேட்டர் சிட்னி, ப்ளூ மவுண்டன்ஸ் மற்றும் இல்லாவாரா பகுதி மக்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்சக் கூடாது என்பதுடன் இரு பக்கெட் தண்ணீர் கொண்டுதான் வாகனங்களைக் கழுவ வேண்டும் எனவும் நீச்சல் குளத்தில் தண்ணீர் நிரப்பச் சிறப்பு அனுமதி பெற வேண்டும் எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இதனை மீறும் தனி நபர்களுக்கு 150 அமெரிக்க டொலர்களும் வணிக நிறுவனங்களுக்கு 550 டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
அதேவேளை அங்கு வெப்பமும் கடுமையாக அதிகரித்து வருகிறது. 40 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ள வெப்பம் காரணமாகக் காட்டுத்தீ சம்பவங்களும் ஏற்பட்டுள்ளன. நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் மட்டும் 100 காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன.
இதற்குக் காலநிலை மாற்றமும் முக்கிய காரணம் எனத் தெரிவித்துள்ள அறிவியலாளர்கள் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள அதிக வெப்பத்தின் காரணமாக வறட்சி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். #அவுஸ்திரேலியா #தண்ணீர்பஞ்சம் #கட்டுப்பாடுகள்