176
பணமதிப்பு நீக்கத்தை சட்டவிரோத கொள்ளை என இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார். பணமதிப்பு நீக்கமானது நாட்டை கடுமையாகத் தாக்கியுள்ளது எனவும் கடந்த 2 மாதங்களில் நிலைமைகள் தவறாகச் சென்றுள்ளன எனவும் இனிமேல்தான் மோசமான நிலை காத்திருக்கிறது எனவும் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் தவறான புள்ளிவிவரங்களை மக்களுக்கு அளிக்கும் இந்திய பிரதமர் மோடியின் பிரச்சார வலை தோல்வியடைந்து விட்டதெனவும் இந்தியாவின் தேசிய வருமானம் கடந்த 2 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது என்ற மோடியின் பிரச்சாரமும் பொய்த்துப் போனது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love