Home இலங்கைசுதுமலையில் வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் அட்டகாசம்…

சுதுமலையில் வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் அட்டகாசம்…

by admin

மானிப்பாய், சுதுமலையில் வீடொன்றுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட 6 பேர் கொண்ட வன்முறைக் கும்பல், காவற்துறையினரைக் கண்டதும் மோட்டார் சைக்கிள் ஒன்றைக் கைவிட்டுத் தப்பி ஓடியுள்ளது. இந்தச் சம்பவம் மானிப்பாய், சுதுமலை வடக்கில் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றது.

2 மோட்டார் சைக்கிள்களில் சென்ற  6 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் புகுந்தது. வன்முறையில் ஈடுபட்டு வீட்டில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து சேதமாக்கினார்கள். அவர்கள் கைகளில் வாள் உள்ளிட்ட இரும்பினாலான ஆயுதங்கள் இருந்தன.

வீட்டிலிருந்த பெறுமதியான பொருள்களை அடித்து சேதப்படுத்தி அட்டூழியத்தில் ஈடுபட்ட கும்பல், வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்திவிட்டுத் தப்பித்தது செல்ல முற்பட்டனர்.

அவ்வேளை அந்த வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் மானிப்பாய் காவற்துறையினைர் இருவரைக் கண்டதும் வன்முறையாளர்கள் தமது மோட்டார் சைக்கிள் ஒன்றை வீதியில் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

வன்முறைக் கும்பலின் மோட்டார் சைக்கிள் காவற்துறையினரால் மீட்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. குறித்த மோட்டார் சைக்கிளின் இலக்க தகடுகள் மறைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More