Home இலங்கைசுவிஸ் தூதரக அதிகாரி; கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் நடக்காத ஒன்று

சுவிஸ் தூதரக அதிகாரி; கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் நடக்காத ஒன்று

by admin


சுவிஸ் தூதரக தூதரக அதிகாரி; கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவமானது நடக்காத ஒன்று என, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (16) இடம்பெற்ற ஊடக மற்றும் பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பின்போது, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சம்பவமொன்று இடம்பெறவில்லை என்பது, விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் சி.சி.டி.வி காட்சிகள் மற்றும் அலைபேசி தரவுகளின் ஊடாகவும் அவ்வாறான சம்பவமொன்று நடைபெற்றிருக்கவில்லையென தெளிவுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது ஊழியர் கடத்தப்பட்டமை தொடர்பில் விசாரணையொன்றுக்கு கோரிக்கை விடுக்கும் பொறுப்பு குறித்த தூதரகத்துக்கு இருந்தது எனவும் பிரதமர் விசாரணைகளுக்காக உத்தரவிட்டிருந்தார் எனவும் தெரிவித்த ஜனாதிபதி தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த சம்பவம் தொடர்பில் குறித்த அதிகாரியின் ஒத்துழைப்பு தேவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.  #சுவிஸ் ,#தூதரகஅதிகாரி #கடத்தப்பட்ட #கோத்தாபய

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More