Home இலங்கைசட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்….

சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்….

by admin

வடக்கில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று(புதன்கிழமை) காலை 10 மணிக்கு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

புதிதாகப் பதவியேற்றுள்ள ஐனாதிபதி கோத்தபாய ராஐபக்ஷ மணல் வழித்தட அனுமதியை இரத்துச் செய்துள்ளதைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தின் தீவகம், அரியாலை, வடமராட்சி கிழக்கு உட்பட பல இடங்களிலும் சட்டவிரோத மணல் அகழ்வுகள் அதிகரித்துள்ளன.

அதேபோன்று வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களிலும் இந்த சட்டவிரோத மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படுவதாக பல தரப்பினர்களும் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருவதுடன் இதனைக் கட்டப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் உரிய நடவடிக்கைளை எடுக்க வலியுறுத்தியும் பல தரப்புக்கள் இணைந்து போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More