Home இந்தியாபிரதமர் மோடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி:-

பிரதமர் மோடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி:-

by admin

பிரதமர் மோடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. குஜராத் முதல்வராக இந்திய பிரதமர் மோடி பதவி வகித்த காலத்தில் பிர்லா, சஹாரா நிறுவனங் களிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற அரசியல் கட்சித் தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இருதரப்பு வாதங்களை ஆராய்ந்த நீதிபதிகள், ஆதாரங்களாக ஏற்றுக்கொள்ள முடியாத ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை அடிப்படையாக கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்தும்படி உத்தரவிட முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது அரசமைப்புக்கு எதிரானதோடு, ஜனநாயகத்துக்கும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை எனத் தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More