இரகசிய காவல்துறையினர் தன்னை கைது செய்வதற்கு முன்னர் பிணையில் விடுதலை செய்து உத்தரவிடுமாறு கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் பிணை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
கடந்த நவம்பர் 6 ஆம் திகதி, ராஜித சேனாரத்ன மேலும் இருவருடன் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கொலை, வெள்ளை வான் கடத்தல், சித்திரவதை, கொள்ளை உள்ளிட்ட தகவல்களை வெளிப்படுத்திய விவகாரம் தொடர்பில் மேற்படி இருவரையும் கைது செய்த புலனாய்வுத்துறையினர் அவர்களை விளக்கமறியலில் வைத்துள்ளனர்.
அந்த ஊடக சந்திப்பில் கலந்துகொள்வதறகாக் குறித்த இருவருக்கும் தலா 10 இலட்சம் ரூபா வீதம் பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னணியில் முன்னாள் அமைச்சர் ராஜிதவே செயற்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
இது குறித்த விசாரணைகளை புலனாய்வுத்துறையினர் முன்னெடுத்து வரும் நிலையிலேயே ந முன்னாள் அமைச்சர் ராஜி;த முன் பிணை கோரி மனுவினை தாக்கல் செய்துள்ளார். #ராஜிதசேனாரத்ன #முன்பிணை #வெள்ளைவான்கடத்தல் #சித்திரவதை