Home இலங்கைபயங்கரவாத தடுப்பு பிரிவினரின் விசாரணைக்கு சென்றவரை காணவில்லை…

பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் விசாரணைக்கு சென்றவரை காணவில்லை…

by admin

பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் விசாரணைக்கு சென்றவரை காணவில்லை என வல்வெட்டித்துறை காவல்  நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கெருடாவில் தெற்கை சேர்ந்த 38 வயதுடைய பரமு விஜயகுமார் என்பவரே காணாமல் போயுள்ளதாக நேற்றைய தினம் வியாழக்கிழமை முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனது கணவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கடந்த 06ஆம் திகதி விசாரணைக்கு அழைத்திருந்தனர். அதற்காக அவர் கொழும்புக்கு சென்று இருந்தார். அன்றைய தினத்தில் இருந்து அவருடனான தொடர்பு கிடைக்கவில்லை என முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

குறித்த முறைப்பாடு தொடர்பில் வல்வெட்டித்துறை காவற்துறையினர்  கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவினருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது , குறித்த நபர் விசாரணைக்கு அன்றைய தினம் சமூகமளிக்க வில்லை என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வல்வெட்டித்துறை  காவற்துறையினர்  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More