Home இலங்கைமுச்சக்கரவண்டி விபத்து – ஒருவர் பலி – மூவர் படுகாயம்

முச்சக்கரவண்டி விபத்து – ஒருவர் பலி – மூவர் படுகாயம்

by admin

(க.கிஷாந்தன்)

எல்ல  காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர். வெல்லவாய பகுதியிலிருந்து எல்ல நகரத்திற்கு சென்றுக்கொண்டிருந்த குறித்த முச்சக்கரவண்டி இன்று ( 24.12.2019 ) அதிகாலை எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் கரந்தகொல்ல 16 – 17 இடைப்பட்ட மைல் கல் பகுதியில் வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

முச்சக்கரவண்டி சாரதிக்கு முச்சக்கரவண்டியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும்  காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவ்வித்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த நான்கு பேரில் பெண் ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியாகியுள்ளதுடன் மேலும் மூவர் ஆபத்தான நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென  காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் பதுளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் உயிரிழந்தவர் மற்றும் படுங்காயமடைந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர்  மேலும் தெரிவித்தனர். இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை எல்ல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.   #முச்சக்கரவண்டி  #விபத்து

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More