Home இலங்கைசெஞ்சோலைச் சிறுவர்களிற்கு பகிரப்பட்ட காணிகளுக்கு, உரிமையாளர்கள் உரிமை கோருகின்றனர்…

செஞ்சோலைச் சிறுவர்களிற்கு பகிரப்பட்ட காணிகளுக்கு, உரிமையாளர்கள் உரிமை கோருகின்றனர்…

by admin

கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை அமைந்திருந்த தமது காணிகளை தம்மிடம் கையளிக்குமாறு காணி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். “1990ம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இந்தியாவிற்கு சென்று அங்கு முகாம்களில் வாழ்ந்து வந்தோம். யுத்தம் நிறைவுற்றதன் பின்னர் எமது காணிகளில் குடியேறுவதற்காக வருகை தந்திருந்தபோது அக்காணிகளில் படையினர் முகாம் அமைத்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் படையினர் குறி்த முகாம்களை அகற்றி காணிகளை விடுவித்தபோது நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் ஆதரவுடன் அக்காணிகள் செஞ்சோலையில் இருந்து வளர்ந்தவர்கள் என குறிப்பிட்ட அளவிலான குடும்பங்களிற்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.

நாங்கள் உறவினர் வுீடுகளிலும், வாடகை வுீடுகளிலும் வாழ்ந்து வருகின்றோம். குறித்த காணிகளிற்கான ஆவணங்கள் எமது கையில் உள்ளன. இத்தனை ஆவணங்களையும் மீறி குறித்த காணிகளை பகிர்ந்தளிக்கபட்டடுள்ளது. இவ்விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்தோம். காணிகளை எமக்கே வழங்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குளுவும் அரச அதிகாரிகளை பணித்துள்ளது, இந்த நிலையில் நாம் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றோம். எமது காணிகளை எமக்கு பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வே்ணடும்” என காணி உரிமையாளர்கள் இன்றைய ஊடக சந்திப்பில் தெரிவித்தனர்.

தம்மிடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் காணி விடயம் தொடர்பில் ஆராய்ந்து பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வே்ணடும் எனவும், இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி, அமைச்சர்கள், அதிகாரிகள் கவனம் செலுத்தி யுத்த்தினால் பாதிக்கப்பட்ட தமக்கு தீர்வு பெற்று தர வேண்டும் எனவும் அவர்கள் குறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்தனர்.

குறித்த காணிகள் சுமார் 25ற்கு மெற்பட்ட செஞ்சோலை சிறுவர்களிற்கு கடந்த வருடம் பகிர்ந்தளிக்கப்பட்டமை குறிப்பிடதக்கதாகும்.55

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More