கிளிநொச்சி ஊரியான் குளத்தில் காணாமல் போன குடும்பஸ்தர் நான்கு மணிநேரங்களின் பின்னர் படையினர் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேசத்திற்குட்பட்ட ஊரியான் குளத்தில் நேற்று (26-12-2019) மதியம் குளத்திற்கு அவரது மகனுடன் மீன்பிடிக்கச்சென்ற சமயம் குளத்தில் மூழ்கி காணாமல் போயிருந்தார்.
இதனையடுத்து பிரதேச மக்கள் காவல்துறையினர்; மற்றும் கிராம அலுவலர் ஆகியோருக்கு தகவல் வழங்கியதுடன், குளத்திலும் தேடுதல் மேற்கொண்;டபோதும், எந்தவிதமான தடையங்களும் மீட்கப்படவில்லை.
இருந்தபோதிலும் இலங்கை இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் குறித்த குளத்தில் தொடர்ந்து மேற்கொண்ட தேடுதலின் அடிப்படையில் பிற்பகல் 4.35 மணியளவில் காணாமல்போனவரின் சடலம் குளத்தில் சட்டவிரோதமாக மண் அகழ்வு செய்யப்பட்ட பாரிய குழியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது
குறித்த குளமானது சிறிய ஆழம் குறைந்த குளமாக காணப்பட்டபோதும் கோடைகாலத்தில் குளத்திலிருந்து பெருமளவான மண் அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலையில் பாரிய குழியாக காணப்படுகின்றது. இவ்வாறான குழியில் மூழ்கியே இவர் உயிரிந்துள்ளதாக அறிய முடிகின்றது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சுப்பிரமணியம் நவநீதன் (வயது 41) என்;ற மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். குறித்த குடும்பஸ்தரின் மனைவி உயிரிழந்த நிலையில் அவரது மூன்று பிள்ளைகளையும் அவரே பராமரித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.இந்தமரணம் தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருவதுடன் சம்பவ இடத்திற்கு மாலை சென்று சடலத்தை பார்வையிட்ட கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் திரு எஸ் சிவபால சுப்பிரமணியம் ; மருத்துவ பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார் #கிளிநொச்சி #காணாமல்போன#குடும்பஸ்தர் #மீட்பு