Home உலகம்அணு சக்தி தொடர்பான ஒப்பந்தங்களில் இருந்து ஈரான் விலகுவதாக அறிவிப்பு

அணு சக்தி தொடர்பான ஒப்பந்தங்களில் இருந்து ஈரான் விலகுவதாக அறிவிப்பு

by admin

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவும் மோதல் போக்கைத் தொடர்ந்து, 2015ஆம் ஆண்டு உலக நாடுகளுடன் செய்துகொண்ட அணு சக்தி தொடர்பான ஒப்பந்தங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது ஈரான்.

இதன் மூலம் யுரேனிய வளத்தைப் பயன்படுத்துவதில் தனக்கு இனி கட்டுப்பாடுகள் இருக்காது எனத் தெரிவித்துள்ள ஈரான் எனினும் ஐநாவின் அணுசக்தி கண்காணிப்புக் குழுவுடன் தொடர்ந்து ஒத்துழைக்கும் எனவும் அறிவித்துள்ளது.  ஈரான் ஜனாதிபதி ஹசன் ரொஹானியின் இந்த முடிவு நேற்று (ஜனவரி 5) ஈரானின் அரவ தொலைக்காட்சியில் அறிவிக்கப்பட்டது.

தனது நாட்டின் அணுசக்தி பணிகள் தொடர்பான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எந்த வரம்புகளையும் ஈரான் மதிக்காது. எந்தவொரு அணுசக்தி செறிவூட்டலையும் வரம்புகள் இன்றி அதன் தொழில்நுட்ப தேவைகளின் அடிப்படையில் ஈரான் தொடரும் என அரசு தொலைக்காட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 3 ட்ரோன் தாக்குதலில் ஈரானிய உயர்மட்ட ராணுவத் தளபதி கஸ்ஸெம் சோலைமானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஈரான் – அமெரிக்கா இடையே பெரும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஈரான் ஏற்கனவே அதன் அணுசக்தி நடவடிக்கைகளுக்கான பல கட்டுப்பாடுகளை மீறியுள்ளது என அமெரிக்கா குற்றம்சாட்டி வருகின்றது

ஈரானின் 52 இடங்களைக் குறிவைத்து தாக்குவோம் என அமெரிக்க ஜனாதிபதி; ட்ரம்ப் விடுத்த மிரட்டல் அறிக்கை வெளியிட்ட நிலையில்தான் நேற்று ஈரான் அணு விவகாரத்தில் இந்த நிலைப்பாட்டை மேற்கொண்டிருக்கிறது.  #அணு சக்தி  #ஒப்பந்தங்களில்  #ஈரான்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More