பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி வீழ்ந்த சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நாவற்குழியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. தரம் 2 இல் கல்வி கற்கும் 7 வயதுடைய சசிதரன் எட்வேட் சாமுவேல்என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார். நேற்று மாலை விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் அருகில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி வீழ்ந்துள்ளார். பின்னர் சிறுவன் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.
சிறுவனை மீட்ட உறவினர்கள் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். எனினும் சிறுவன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்ததாக போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
இறப்பு விசாரணையை. வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்றுப் பரிசோதனை பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.