குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டத்தை தடுப்பதற்கு சர்வதேச சதித் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக துறைமுக அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை மலினப்படுத்தும் வகையில் சில சதித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர் ஹம்பாந்தோட்டை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டால் அது மிக முக்கியமான கேந்திர நிலையமாக மாற்றமடையும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய சீன நிறுவனம் ஒன்றுடன் உடன்படிக்கை கைச்சாத்திடுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.