யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இலங்கையின் 72ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்
இலங்கையின் 72ஆவது சுதந்திர தினம் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் இன்று காலை இடம்பெற்றது. இந்த நிகழ்வுகள் யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றன. தமிழ் மற்றும் சிங்களம் என இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசியக்கொடி ஏற்றப்பட்டது. தேசியக் கொடியினை மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் ஏற்றிவைத்தார். தொடர்ந்து மத குருமார்களின் ஆசியுரை இடம்பெற்று, மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள பழைய பூங்காவில் மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வு.
இலங்கையின் 72 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு நாட்டின் பல பாகங்களிலும் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம் பெற்றது. அந்த வகையில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் தேசிய சுதந்திர தின நிகழ்வு இடம் பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து முதலில் தமிழிலும், பின்னர் சிங்களத்திலும் தேசிய கீதம் ஒலிக்கச் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சர்வமத வழிபாடுகள் இடம் பெற்றதோடு,மாவட்டச் செயலக வளாகத்தில் மரக்கண்றுகள் நாட்டி வைக்கப்பட்டதோடு,தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு மரக்கண்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது. இதே வேளை மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேசச் செயலகங்களிலும் சுதந்திர தின நிகழ்வுகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.