Home இலங்கை பல மில்லியன் அமெரிக்கா டொலர்கள் மோசடி – இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரித்தானியருக்கு சிறை….

பல மில்லியன் அமெரிக்கா டொலர்கள் மோசடி – இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரித்தானியருக்கு சிறை….

by admin

லண்டனை தளமாகக் கொண்ட மருந்து முதலீட்டு நிறுவனமான அவிலியன் என்ற அமெரிக்க நிறுவனம் ஒன்றின் மின்னஞ்சல் ஊடாக பல மில்லியன் அமெரிக்கா டொலர்களை மோசடி செய்த  ஒருவருக்கு  பிரித்தானிய  நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.  இலங்கையை  பிறப்பிடமாகக் கொண்ட 41 வயதான மைக்கல் கினானே என்ற   பிரித்தானியருக்கே  பிரித்தானியாவின் கர்னார்போன் கிரவுன் நீதிமன்றம்   7 வருடங்களும் 8 மாதங்களும் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

க்வினெட்டின் போர்த்மடோக்கைச் சேர்ந்த 41 வயதான  மைக்கல் கினானே,  எஃப்.பி.ஐ மற்றும் பிரிட்டிஷ்  காவற்துறை  விசாரணையான ஒபரேஷன் ப்ளூ கோஸ்டலின் ஊடாக  கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

லண்டனை தளமாகக் கொண்ட மருந்து முதலீட்டு நிறுவனமான அவிலியனின் மின்னஞ்சல் அமைப்புகளில்  ஊடுருவி, பணம் செலுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுடன்,  பணமோசடிக்கு சதி செய்ததாகவும், மூன்று முறை மோசடி செய்ததாகவும்  தனது குற்றத்தை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்த வகையில் 2 நவம்பர் 2018 அன்று, அந்த நிறுவனம் தனது நட்வெஸ்ட் வங்கிக்  கணக்கில் 8 7.8 மில்லியனை  வைப்புச் செய்துள்ளது. இலங்கையில் பிறந்த பிரிட்டிஷ் குடிமகனான கினானே இரண்டு வெளிநாட்டு நாணயக் கணக்குகளை  வைத்திருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது.

2 நவம்பர் மற்றும் 5 நவம்பர் 2018 க்கு இடையில், கினானின் கணக்குகளில் வரும் நிதி அவரது நண்பர்களிடையே போலந்து, ஜெர்மனி, ஹொங்கொங், சீனா மற்றும் மலேசியாவில் உள்ள கணக்குகளுக்கு  மாற்றப்பட்டுள்து.

இது குறித்து நீதிபதி நிக்கோலா ஜோன்ஸ், வழங்கிய தீர்ப்பில்,

“இந்த பணத்தை மோசடி செய்வதில் நீங்கள் முக்கிய பங்கு வகித்தீர்கள், வங்கிக் கணக்குகளுக்கு இடையில் உகந்த தொகையை நகர்த்துவதை உறுதி செய்வதில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டீர்கள். “இது பேராசையால் தூண்டப்பட்டது, இதற்காக நீங்கள் உண்மையான வருத்தத்தைக் காட்டினீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த ஓகஸ்ட் 2019 இல் லண்டன் கட்விக் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட  கினானே அதிக மதிப்புள்ள கார்களை மோசடி செய்வதற்கும் திட்டமிட்டதாக அறியப்பட்டுள்ளது. அவர் ஒரே இயக்குநராக இருந்த ஒரு வணிகத்துடன் இணைக்கப்பட்ட கினானேவுக்கு சொந்தமான தனி கணக்குகளுக்கும் நிதி மாற்றப்பட்டுள்ளது.

மஜிக் லில்லி லிமிடெட் என அடையாளம் காணப்பட்ட இவரது நிறுவனம், போர்த்மடோக்கில் உள்ள அவரது வீட்டு முகவரியிலிருந்து செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும் இந்த  நிறுவனத்திடம்  பங்கு இல்லை, வர்த்தகம் செய்யவில்லை மற்றும் கணக்கு அறிக்கைகள் முறையாக தாக்கல் செய்யப்படவில்லை அல்லது கூட்டுத்தாபன வரி செலுத்தவில்லை.

லண்டன் கட்விக் விமான நிலையத்தில் துருக்கியில் இருந்து விமானத்தில் இருந்து இறங்கிய கினானே 2019 ஓகஸ்ட் 8 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நேரத்தில், அவர், 4,550 பவுண்ட்  மதிப்புள்ள டேக் ஹியூயர் கடிகாரத்தை அணிந்திருந்ததாக காவற்துறையினர்   தெரிவித்தனர்.

அவர் அண்மையில்  டுபாயை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்தில் 30,000 டாலருக்கு சமமான தொகையை முதலீடு செய்துள்ளார் என்பதை அடையாளம் காணும் ஆவணங்களும் அவரிடம் இருந்தன. கினானேக்குக் சொந்தமான  32 வங்கிக்  கணக்குகளுக்கான வங்கி ஆவணங்களை நோர்த் வேல்ஸ் காவல்துறை இதுவரை  கண்டறிந்துள்ளது 13 மாத விசாரணையின் விளைவாக  6 1.6m டொலர்  மீட்கப்பட்டு பாதிக்கப்பட்டவருக்கு  ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மகிழ்ச்சி அடைந்த அவிலியன்   நீதி  உறுதிதி செய்யப்பட்டுள்ளது என்றும் மிகுதிப் பணத்தையும்  பணத்தை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், தமது  இணைய பாதுகாப்பை மேம்படுத்த நிபுணர்களுடன் கலந்தாலோசித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More