Home இலக்கியம்நிரூபாவின் “இடாவேணி” நூல் அறிமுகம் ஆனது…

நிரூபாவின் “இடாவேணி” நூல் அறிமுகம் ஆனது…

by admin


யாழ்ப்பாணம் இணுவிலைச் பிறப்பிடமாகவும், கனடாவை  வசிப்பிடமாகவும் கொண்ட  பெண்ணிய எழுத்தாளர் நிரூபாவின் “இடாவேணி நூல் அறிமுகமும் உரையாடலும்” நேற்று மாலை 4.30 மணியளவில் யாழ்ப்பாணம் பொது நூலகக் குவிவுமாடக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. நூல் பற்றிய அறிமுகத்தை சுரேகா பரம் நிகழ்த்தினார். கருத்தியல் சார்ந்த பெண்ணிய அணுகுமுறையில் வாசிப்பு அனுபவத்தை, மதுஷா மாதங்கியும்,  பிறைநிலா கிருஷ்ம் நிகழ்த்தினார்கள். இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் புலம்பெயர் இலக்கியவாதிகள், இலக்கிய ஆர்வலர்கள் , சமூக செயற்பாட்டாளர்கள், நூலாசிரியரின் உறவினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

சுனைக்குது, அச்சாப்பிள்ளை ஆகிய இவரது முன்னைய படைப்புக்கள் நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டதுடன், புதிய கோணங்களில் பெண் எழுத்துக்களும் வாசிப்புக்களும் பெருக வேண்டிய அவசியத்தைப் பறைசாற்றுவதாகவும் நிகழ்வு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More