Home உலகம்ஜப்பான் கப்பலில் 454பேருக்கு கொரோனா பாதிப்பு

ஜப்பான் கப்பலில் 454பேருக்கு கொரோனா பாதிப்பு

by admin

ஜப்பானின் யோகாஹாமா துறைமுகத்தில் நிற்கும் கப்பலில் கொரோனா பரிசோதனை நிறைவடைந்த நிலையில், மொத்தம் 454 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஹொங்கொங்கில் இருந்து ஜப்பானுக்கு சென்ற ‘டைமண்ட் பிரின்சஸ்’ சொகுசு கப்பல் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக யோகாஹாமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு, பயணிகள் வெளியேற தடை விதிக்கப்பட்டது.

கப்பலில் இருந்த சிலருக்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்ததால், அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாமோ என்ற அச்சம் எழுந்தது. அதன் அடிப்படையில் கடந்த சில நாட்களாக கப்பலில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் என அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டன.

கப்பலில் 2,666 பயணிகள் மற்றும் 1,045 ஊழியர்கள் என மொத்தம் 3,711 பேர் இருந்தனர். இதில் 5 இந்தியர்கள் உள்பட மொத்தம் 454 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது  #ஜப்பான்  #கப்பல்  #கொரோனா #பாதிப்பு  #பயணிகள்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More