குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சாதனைகளின் அடிப்படையில் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என அமெரிக்க நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
டென்னிஸ் வீராங்கனை ஸ்பெப்பி கிராப்பின் சாதனையை முறியடிக்ககக் கூடிய சந்தர்ப்பம் செரீனா வில்லியம்ஸிற்கு கிட்டியள்ளது. எதிர்வரும் அவுஸ்திரோலிய ஓபன் போட்டித் தொடரின் போது அதிக கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றெடுப்பது தொடர்பில் முயற்சிக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் அதி கூடிய கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற மகளிர் டென்னிஸ் வீராங்கனை என்ற பெருமையை ஸ்டெப்பி கிராப் வகித்து வருகின்றார். 36 வயதான வில்லியம்ஸ் உலகின் இரண்டாம் நிலையை வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெர்மனிய வீராங்கனை ஸ்டெப்பி கிராப்பை விடவும், அதிகளவு வெற்றிகளை ஈட்டிய சாதனையை நிலைநாட்ட சில போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. சாதனைகளை நிலைநாட்டும் நோக்கத்தை விடவும் வெற்றிகளை ஈட்டுவது தமது இலக்கு என அவர் குறிப்பிட்டுள்ளார்.