பிரேசிலின் வட கிழக்கு நகரான நடாலில் உள்ள அல்காகஸ் சிறையில் நேற்றையதினம் இடம்பெற்ற மோதல்களில் குறைந்தது பத்து பேர் கொல்லப்பட்டுள்ளனர் என உள்ளுர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சிறையில் உள்ள போட்டி குழுக்களுக்குள் நடந்த மோதலில் பலர் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்த மோதல்களின் போது இரு தரப்பினரும் வெடி குண்டுகள் வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்கிக் கொண்டதாகவும் சிலரின் தலைகள் துண்டிக்கட்டு காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைக்குள் தொடர்ந்து துப்பாக்கி சண்டையும், வெடி குண்டு சத்தமும் கேட்கின்றதெனவும் எனவே பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது அண்மைக்காலங்களில் பிரேசிலில் இடம்பெற்ற மூன்றாவது மிகப் பெரிய சிறைச்சாலை கலவரம் என்பது குறிப்பிடத்தக்கது.