Home இலங்கைஇலங்கைக்குள் பிரவேசிக்க, கப்பல் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு…

இலங்கைக்குள் பிரவேசிக்க, கப்பல் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு…

by admin

கொரோன வைரஸ் தொற்று அவதானம் காரணமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் கப்பல் பயணிகளுக்கு இலங்கையினுள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இன்று (03.03.20) காலை சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இன்றைய தினம் சொகுசு கப்பல் ஒன்று இலங்கைக்குள் பிரவேசிக்க  வர இருந்ததாகவும்,   சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய இன்று தொடக்கம் பயணிகள் கப்பல்களின் பயணிகளை தரையிறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More