159
இலங்கைக்கும் குவைத்திற்கும் இடையிலான அனைத்து விமான பயணங்களையும் ஒரு வார காலத்திற்கு ரத்துசெய்ய குவைத் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். அதன்படி நேற்றைய தினத்தில் (06.03.20) இருந்து அமுலுக்கு வரும் வகையில் குவைத் சிவில் விமான சேவை பிரதி பணிப்பாளர் நாயகத்தினால குறித்து அறிவிப்பு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கைக்கு மேலதிகமாக பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், இந்தியா, லெபனான், சிரியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு இடையிலான விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love