உலகம் முழுவதும் கொரோனா வைரசினால் 119 நாடுகள் பாதிக்கப்பட்டள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு வெளியே இத்தாலி, ஈரான், தென்கொரியா ஆகிய 3 நாடுகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் சீனாவில் அதிக பாதிப்பை உண்டாக்கிய கொரோனா வைரஸ் தற்போது 6 கண்டங்களில் உள்ள நாடுகளுக்கு பரவியுள்ள நிலையில் உலகம் முழுவதும் 119 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
கொரோனாவினால் இதுவரை 4 ஆயிரத்து 298 பேர் உயிரிழந்துள்ளதுடன் 1 லட்சத்து 19 ஆயிரத்து 186 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
நேற்று ஒரே நாளில இத்தாலியில்; 168 பேரும் ஈரானில் 54 பேரும் பலியாகி இருப்பதால் அந்நாடுகளில் கடும் அச்சம் நிலவி வருகின்றது. மேலும் ஈரானில் நேற்று ஒரே நாளில் 881 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் ; அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில் மொத்தம் 8 ஆயிரத்து 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென்கொரியாவில் மேலும் 8 பேர் உயிரிழந்து உள்ளதையடுத்து பலி எண்ணிக்கை 61 ஆக உயர்ந்தது. அங்கு 7 ஆயிரத்து 755 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஸ்பெயினில் நேற்று 6 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 36 ஆக உயர்ந்தது. பிரான்சில் நேற்று இறந்த 3 பேரையும் சேர்த்து பலி எண்ணிக்கை 33 ஆகியுள்ளது
அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளதுடன்நேற்று மேலும் 4 பேர் உயிரிழந்தனர். மொத்தம் 981 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 277 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜப்பானில் 19 பேரும், இங்கிலாந்தில் 6 பேரும், நெதர்லாந்தில் 4 பேரும், சுவிட்சர்லாந்தில் 3 பேரும், ஜெர்மனியில் 2 பேரும், ஈராக்கில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர் நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரசினால் 119 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது #கொரோனா #நாடுகள் #இத்தாலி #ஈரான் #தென்கொரியா #சீனா