Home இலங்கையாழ் தேர்தல் மாவட்டத்திற்கான முதலாவது வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது

யாழ் தேர்தல் மாவட்டத்திற்கான முதலாவது வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது

by admin


எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பமானது. யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ் தேர்தல் தேர்தல் மாவட்டத்தில்   போட்டியிடுவதற்கான முதலாவது வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு முதலாவது வேட்பு மனுவினை ஜனசெத பெரமுன சார்பில் பத்ர முல்லை சில ரத்தின தேரர் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.

இன்று முதல் 19ஆம் திகதி வரை வேட்புமனுத்தாக்கல் ஏற்றுக்கொள்ளப்பட உள்ள நிலையில் யாழ் மாவட்ட செயலகத்தில் காவற்துறையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் மேலதிக பாதுகாப்பு கருதி காவற்துறையினரின் மோப்ப நாய்களும் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More