148
மன்னார் நகர சபை பிரிவில் கூலித்தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் மற்றும் பெண் தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களின் நலனை கருத்தில் கொண்டு உலர் உணவுப்பொதிகளை வழங்கி வைக்க உள்ளதாக மன்னார் நகர சபையின் முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார்.
-இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் இன்று(23) கருத்து தெரிவிக்கையில்,,,
-நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலை தொடர்பாகவும் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினை தொடர்பாக ஆராயும் அவசர கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை (23) காலை 11 மணியளவில் மன்னார் நகர சபையில் இடம் பெற்றது. -நகர சபை உறுப்பினர்கள், காவல் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்து கொண்டிரந்தனா.
இதன் போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலை காரணமாகவும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாகவும் மக்கள் வெளியில் நடமாட முடியாத அச்ச நிலை ஏற்பட்டுள்ளமை தொடர்பாக ஆராயப்பட்டது.
குறிப்பாக ஊரடங்குச் சட்டமும் அமுல் படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மன்னார் நகர சபை பிரிவில் நாளாந்தம் கூலித்தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள், பெண் தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
-இந்த நிலையில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அடிப்படை வசதி இல்லாத குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை நாளை (23) செவ்வாய்க் கிழமை முதல் வழங்க முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.என தெரிவித்தார்.
இதே வேளை மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள காமன்ஸ் கட்டிடத்தில் வெளி மாவட்டங்களில் இருந்து கொரோனா தொற்றுள்ளவர்களை கொண்டு வந்து சிகிச்சை வழங்க உள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகளை மன்னார் நகர சபை உறுப்பினர்களாகிய நாம் ஏற்றுக் கொள்ள போவதில்லை. நகர சபையின் தலைவர்,உறுப்பினர்கள் ஆகிய நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த நோயாளர்கள் இனம் காணப்படும் பட்சத்தில் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தடுப்பு மையமாக பயன்படுத்த அனுமதிக்க முடியும்.
ஆனால் வெளி மாவட்டங்களில் இருந்து அழைத்து வருகின்றவர்களையும், வெளி நாட்டவர்களையும் இங்கு அழைத்து வந்து சிசிச்சை வழங்க அனுமதிக்க மாட்டோம்.அவ்வாறு மீறி செயற்படும் பட்சத்தில் மக்களுடன் இணைந்து எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்.என அவர் மேலும் தெரிவித்தார். #வறுமைக்கோட்டிற்குற்பட்ட #பாதிக்கப்பட்ட #உலர்உணவு #மன்னார் #நகரசபை
Spread the love