Home இலங்கைமஸ்கெலியாவில் ஊரடங்குச்சட்டத்தை மீறிய ஐந்து பேர் கைது

மஸ்கெலியாவில் ஊரடங்குச்சட்டத்தை மீறிய ஐந்து பேர் கைது

by admin

க.கிஷாந்தன்)

காவல்துறை ஊரடங்குச்சட்டத்தை மீறும் வகையில் செயற்பட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்  மஸ்கெலியா காவல் நிலைய  பொறுப்பதிகாரி தெரிவித்தார். மஸ்கெலியா காவல்துறைபிரிவுக்குட்பட்ட மொக்கா தோட்டத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

‘கொரோனா’ வைரஸை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. அத்துடன், தற்பாதுகாப்பை உறுதிப்படுத்தி வீட்டுக்குள் இருக்குமாறும் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

எனினும், இதனை கருத்திற்கொள்ளாது விளையாட்டில் ஈடுபட்டவேளையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவத்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அரசாங்கத்தாலும், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தரப்பினராலும் வழங்கப்படும் ஆலோசனைகளை உரிய வகையில் கடைபிடித்து, ‘கொரோனா’ ஒழிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு குறித்த பகுதி மக்களிடம் காவல்துறையினர்  வேண்டுகோள் விடுத்தனர்.  #மஸ்கெலியா #ஊரடங்கு #கைது   #கொரோனா

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More